இஸ்ரேல் – காஸா 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு 4 நிபந்தனைகள் முன்வைப்பு
இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான 2ஆம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் 4 நிபந்தனைகள் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி அமைச்சர் எலி கோஹன் நிபந்தனைகள் குறித்து கூறுகையில்,
“நாங்கள் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்திற்குக் கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் 4 நிபந்தனைகள் இருக்கின்றன.
1. காஸாவிலிருந்து ஹமாஸை வெளியேற்றுதல்
2. அனைத்து இஸ்ரேலியக் கைதிகளையும் விடுவித்தல்
3. காஸாவை ஆயுதமற்ற பகுதியாக மாற்ற வேண்டும்
4. காஸா முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்
இந்த 4 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போர் நிறுத்தம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஹமாஸ் என்பது பலஸ்தீன மக்களுக்கான விடுதலை அமைப்பாகும். அப்படி இருக்கையில், ஹமாஸை வெளியேற்றுவது காஸாவை வெளிப்படையாகவே இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.