கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் கைது
கொட்டாஞ்சேனை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மற்றொரு சந்தேக நபர் மொரட்டுவை, கட்டுகுருந்தவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்த போது, எகொட உயனவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் இந்த மாதம் 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்தது.