உக்ரைன் – ரஷிய போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம்
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் நேற்று(11) நடந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட இராணுவ உதவி, உளவுதத் தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்ப்புக்கொண்டுள்ள நிலையில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. போரை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புதின் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்துவரும் உக்ரைன் – ரஷ்ய போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.