அமெரிக்க விமானத்தில் தீப்பரவல்
டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது.
விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. மேலும், விமான நிலையத்தில் இருந்த தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயற்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கன் எயார்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் 1006 பாதை மாற்றப்பட்டு டென்வெர் விமான நிலையத்தின் வேறொரு ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்தது.
இது குறித்து எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” குறித்த விமானம் டென்வர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதும், விமானத்தில் இருந்த 172 பயணிகள், ஆறு பணியாளர்கள் என அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.குறித்த விமானத்தின் எஞ்சின் சார்ந்த பிரச்சனைகளைாலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.