உள்நாடு

கிழக்கு மாகாணத் தமிழர்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்

கற்பனைவாத அரசியலுக்கு அப்பால் யதார்த்த பூர்வமான அரசியலை மக்களிடம் கொண்டு சென்றால் மாத்திரம் கிழக்கு மாகாணத் தமிழர்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற உயரிய நோக்குடன்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும், முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (15) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நாங்கள் அனைவரும் கிழக்குத் தமிழர்களின் நிலம் வளம் பொருளாதாரம், கல்வி, கலை, கலாசாரம் பண்பாட்டு மனித விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் நோக்குடன் அரசியலுக்கு வந்தோம். தற்போது கிழக்குத் தமிழர்களை மையமாக வைத்து அரசியல் செய்பவர்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் நிலைமை காணப்படுகிறது.

முற்போக்கு தமிழர் கழகம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பலமான ஒரு அமைப்பபை உருவாக்கவேண்டும் என 2020ஆம் ஆண்டு முதல் பேசிவந்தோம். அது இந்த காலகட்டத்தில் கைகூடவில்லை தற்போது கிழக்கு தமிழர் கூட்டமைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் சுபீட்சத்துக்கான ஆரம்ப புள்ளியாகவே நான் பார்க்கின்றேன். இந்த மாகாணத்திலே போலி அரசியல் செய்யாமல் பேச்சுக்கு அப்பால் செயற்பாட்டு ரீதியாக கடந்த காலத்திலே நாங்கள் செய்துகாட்டியுள்ளோம். பல்வேறு துறைசார்ந்து வேலைத் திட்டங்களை மக்களின் காலடிக்கு கொண்டு சேர்த்துள்ளோம் என்ற ஆத்ம திருப்தி எங்களுக்கு உள்ளது.

தற்போது மக்களுக்காக அர்ப்பணித்து செயற்பட்ட இரண்டு கட்சிகள் தங்களுடைய இலாப நலனுக்கு அப்பால் ஒ;டடுமொத்த கிழக்குத் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் அவர்களுக்கான யதார்த்த பூர்வமான அரசியலை மக்கள் மத்தியில் கொண்டுசென்றால் மாத்திரம் கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு உயரிய நோக்கோடு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை நாங்கள் உருவாக்கி நாங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைய்சாத்திட்டுள்ளோம்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இந்த மாகாணத்தினை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் கொது அமைப்புக்கள் புத்திஜீவிகள் தங்களின் செந்த அரசியல் லாபம் கட்சி என்பவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு கிழக்குத் தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கின்ற வகையிலே எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தோல்வியடைவதற்காக போட்டியிடவிலை வெற்றியை நோக்கியே போட்டியிடுகிறது”

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மாகாணசபைக்கான அத்திவாரமாகவே பார்க்க வேண்டும் கிழக்கு மாகாணம் எங்களை விட்டு செல்லுமானால் தமிழ் மக்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *