சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ; கொழும்பில் அதிகம்.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்குள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன், அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தும் , இரண்டாவது அதிகளவான முறைப்பாடுகள் கம்பஹாவிலிருந்தும் , மூன்றாவது அதிகளவான முறைப்பாடுகள் குருநாகலிலிருந்தும் பெறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.